லோக்பால் பல ஆண்டுகள் கழித்து நாம் நிறைவேற்றியுள்ளோம். குற்றம் நிரூபிக்கப்பட்ட எம்.பி.,க்களை பார்லி.,யில் இருந்து வெளியேற்றியுள்ளோம், இது நமக்கு பெரும் வெற்றி ஆகும். ஊழல் மிக பெரும் சவாலாக உள்ளது. ஊழல் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி வருகிறது. இதனை நாம் ஏற்க முடியாது. ஐக்கிய முற்போக்கு அரசு ஊழலை ஒழிக்க மற்ற அரசுகளை விட கடுமையாக உழைத்துள்ளது.
நாட்டின் வளர்ச்சியே வறுமையை ஒழிக்க முடியும். நாம் வறுமையை ஒழிக்க பாடுபட வேண்டிய நிலையில் உள்ளோம். இந்தியா பல வளங்களை கொண்டுள்ளது. வரவிருக்கும் 10 ஆண்டுகளில் 100 மில்லியன் வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். நமது தொழிலாளர்கள் பலர் கூலியால் ஏமாற்றப்படுபவர்களாக உள்ளனர். இவர்களை காத்திட வலிமையான சட்டம் தேவையாக உள்ளது. காங்கிரஸ் அரசின் தகவல் அறியும் உரிமை சட்டம் காங்கிரஸ் அரசின் பெரும் நடவடிக்கை ஆகும்.
நமது இளைஞர்கள் உலக அளவில் தொழில் முனைவோர்களுடன் இணைக்கப்பட வேண்டும். இதற்கென நாம் வழிவகைகள் காண வேண்டும். நாட்டின் பணவீக்கம் முதல் கவனத்தில் எடுத்து கொண்டு செயல்பட்டு வருகின்றோம். விலைவாசி உயர்வினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை நாம் விரைவில் சீர் செய்ய வேண்டும். நில கையகப்படுத்துதல் தொடர்பான சட்ட மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். இது தொழில் நிறுவனத்திற்கு உதவுவதாக இருக்க வேண்டும். இதில் பல சவால்கள் இருக்கிறது. மக்கள் நலத்திட்டத்தில் இன்வெஸ்ட் செய்வது பொருளாதாரத்தை பாதிக்காது.அரசின் நல்ல சாதனைகளை செய்தித்தாள்களில் போட்டு விற்பதில்லை.
தொழில் துறை மற்றும் கல்வி நடைமுறை இடையே நாம் தொடர்பற்று இருக்கின்றோம். உற்பத்தியில் நாம் திறந்த வெளியாக இருக்க வேண்டும். நாட்டில் ஊழல் பெரும் சவாலாக உள்ளது என்றும் இது மக்களின் ரத்தத்தை உறிஞ்சுவதாக உள்ளது என்றும் , இது போன்ற பிரச்னைகளை ஒழிக்க , நாம் அதிரடி திட்டங்களுடன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூகுள் போல நமது நாட்டின் நிலையை உருவாக்க வேண்டும் எனவும் காங்., துணை தலைவர் ராகுல் டெல்லியில் நடந்த எப்.ஐ.சி.சி.ஐ.,கூட்டத்தில் பேசினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி