ஜேக்கப் சகாயகுமார் இவர் ஜூன் 4,1974 அன்று உத்தம பாளையதில் பிறந்தார் .தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜேக்கப் சென்னையில் வசித்து வந்தார். இந்தியாவில் தமிழ்நாட்டில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் “ஆஹா என்ன ருசி” சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது சமையலை நினைக்கும் போதும் இன்றும் நம்மால் சப்பு கொட்டாமல் இருக்க முடியாது.
இவர் நான்கு வயதில் இருந்தே சமையல் கலை கற்றுக்கொண்டதாகவும், 14-வயதில் இருந்து சமையல் பயிற்சி பெற்றதாகவும் பல்வேறு கருத்து நிகழ்கிறது. இவர் மதுரை, அமெரிக்கன் கல்லூரியில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றவர்.
மேலும் மணக்கும் தமிழகம், கிச்சன் கிளினிக்,ஆஹா என்ன ருசி – அசைவ சமையல்,ஆஹா என்ன ருசி – சைவ சமையல் போன்ற நூல்களின் தொகுப்பாளர்.
கின்னஸ் சாதனை
கடந்த 2010ம் ஆண்டு தொடர்ந்து 24 மணி நேரம் 485 விதமான உணவுகளை தயாரித்து ஜேக்கப் கின்னஸ் சாதனை படைத்தார்.
ஆஹா என்ன ருசி நிகழ்ச்சியில் சமையல் செய்வதை சமையலறையோடு நிறுத்தாமல் ஏரிக்கரை, குளம், அருவி என பல்வேறு இடங்களில் சமைத்து நிகழ்ச்சியை வித்தியாசப்படுத்திக்காட்டினார்.இந்த நிகழ்ச்சி பலராலும் வரவேற்கப்பட்டது.
கடந்த நவம்பர் 5, 2012 ஆண்டு மாரடைப்புக் காரணமாக தனியார் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி அன்று இயற்கை எய்தினர். அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், அவரது சமையல் கலை மறையவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி