அரசியல்,முதன்மை செய்திகள் தேர்தலுக்கு முண்ணே கட்டி பிடி வைத்தியமா?…

தேர்தலுக்கு முண்ணே கட்டி பிடி வைத்தியமா?…

தேர்தலுக்கு முண்ணே கட்டி பிடி வைத்தியமா?… post thumbnail image

தமிழக காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுக்கான முதல் கூட்டம் இன்று சத்திய மூர்த்தி பவனில் காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த நிர்வாகிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் வாசன் ஆதரவாளர்களும் மற்றும் தங்கபாலு, ப. சிதம்பரம் ஆதரவாளர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர்.

கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் வாசன் – தங்கபாலு ஆதரவாளர்களுக்கிடையே மோதல் ஏற்ப்பட்டது.

தங்கபாலு ஆதரவாளர்களான மாநில துணைத் தலைவர்கள் டி. சதாசிவலிங்கம், ஆர். தாமோதரன், தென் சென்னை மாவட்டத் தலைவர் ஆர்.கே. வெங்கட் உள்ளிட்டோர் தங்கபாலுவை ஏன் அழைக்கவில்லை எனக் கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அவர்களை மாநிலத் தலைவர் ஞானதேசிகன் சமாதானப்படுத்த முயன்ற போதும் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தவாரே கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய வாசன் ஆதரவு நிர்வாகிகள், முதல் கூட்டத்திலேயே மோதலில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்காக அனைவரும் கையெழுத்திட்ட மனுவை அளித்தனர்.

ப. சிதம்பரம் ஆதரவாளர்கள் புறக்கணிப்பு

கூட்டத்தில் ப. சிதம்பரம் ஆதரவு மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. ஆனால், சிதம்பரம் ஆதரவாளரான தாம்பரம் நாராயணன் கலந்து கொண்டார். அது போலவே , தங்கபாலு ஆதரவாளரான திருச்சி தெற்கு மாவட்டத் தலைவர் சுப. சோமுவும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஞானதேசிகன் கூறியது:

மாநிலத் தலைவர் என்ற முறையில் புதிய நிர்வாகிகளுடன் சாதாரண முறையில் கலந்துரையாடவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால் தான் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், மூத்த தலைவர்கள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் அழைக்கப்படவில்லை. புதிய நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம் விரைவில் நடைபெறும் என்றும் அதில் அனைவரும் பங்கேற்பார்கள் என்றும் கூறினார்.

மேலும், அவர் நான் ஒருதலைபட்சமாக முடிவு எடுப்பவன் அல்ல. எல்லோரையும் மரியாதையுடன் அழைத்துப் பேசுபவன். எல்லோருக்கும் பதவிகள் கொடுப்பது சாத்தியமல்ல. பதவிகள் கொடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. யாருக்காவது குறைகள் இருந்தால் மேலிடத்தில் முறையிடலாம். அதற்கான வாய்ப்புகள் காங்கிரஸில் உள்ளன. இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் கூட்டத்தில் இருந்து சிலர் வெளிநடப்பு செய்திருப்பது வருத்தமளிக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி மேலிடத்துடன் கலந்துபேசி முடிவெடுக்கப்படும் என்றார் ஞானதேசிகன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி