விஜய்யின் முந்தைய படம் தலைவா வெளியாவதில் பெரிய சிக்கல் இருந்ததால், ஜில்லாவை பிரச்சினை இன்றி வெளியிட முயன்ற ஆர்.பி.சௌத்ரி இதற்காகவே படத்தில் அரசியல் வசனங்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.ஆனால், இப்போது முதல் சிக்கல் வருமான வரி சோதனை மூலம் வந்துள்ளது.
ஜில்லா படத்தின் விநியோக உரிமை விற்பனை சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில் சோதனை நடப்பது குறிப்பிடத்தக்கது. ஜில்லா படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
ஆர்.பி.சவுத்ரியின் அலுவலகம் மட்டுமல்லாமல், அவரது வீடுகள் மற்றும் அவரது மகன்களான நடிகர்கள் ஜீவா, ரமேஷ் உள்ளிட்டோர் வீடு, அலுவலகங்களிலும் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி