மதுரையில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் செங்கல்பட்டு அருகே வந்தபோது எஞ்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இந்த தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் விரைந்து சென்று என்ஜின் கோளாறை சரி செய்து வருகின்றனர். இதனால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் நெல்லை, ராமேஸ்வரம், மன்னார்குடி ரயில்களுக்கும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி