செய்திகள்,முதன்மை செய்திகள் காலை கழுவிய போலீஸ்….

காலை கழுவிய போலீஸ்….

காலை கழுவிய போலீஸ்…. post thumbnail image
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நகர், மத்திய சிறையில் 65 நாட்களாக அடைக்கப்பட்டிருந்த லாலு பிரசாத், கடந்த திங்கள் கிழமை, ஜாமினில் வெளியே வந்தார். அவர் வீடு அமைந்துள்ள பாட்னா நகருக்கு செல்லும் முன் ஜார்க்கண்ட் மாநிலம், ராம்கார் என்ற இடத்தில் உள்ள கோவிலுக்கு சென்றார். அவருடன் ஏராளமான, கட்சியினரும், போலீஸ் அதிகாரிகளும் சென்றிருந்தனர்.

கோவில் வாசலில் காரில் இருந்து இறங்கிய லாலு செருப்பை கழற்றி போட, அங்கே நின்றிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் அந்த செருப்பை எடுத்து தன் கக்கத்தில் இடுக்கிக் கொண்டார். டி.எஸ்.பி., அந்தஸ்த்தில் உள்ள மற்றொரு போலீஸ் அதிகாரி அங்கிருந்த தண்ணீர் செம்பை லாலுவின் காலில் ஊற்றி கழுவி விட்டார்.

கோவில் உள்ளே சென்ற லாலு, வழிபட்டு திரும்பியதும் அவரின் செருப்பை தூக்கி வைத்திருந்த போலீஸ் அதிகாரி குனிந்து மாட்டிவிட்டார். இந்தக் காட்சிகள் அம்மாநில, டிவிகளில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

லாலுவின் செருப்பை தூக்கி வைத்திருந்த, காலை கழுவிய போலீஸ் அதிகாரிகளின் மீது விசாரணை நடத்த ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி