நட்பு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு ஆண்டுதோறும் ஆர்டர் ஆப் பிரண்ட்ஷிப் என்ற உயரிய விருதை ரஷ்ய அரசு வழங்கி கவுரவிக்கிறது. இந்தாண்டுக்கான இந்த விருது, இந்திய விஞ்ஞானி சிவதாணுபிள்ளை, மத்திய கணக்கு தணிக்கை குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை திட்டத்தை நிறைவேற்றி இந்தியா, ரஷ்யா நட்புறவு பலப்படுவதற்கு காரணமாக இருந்ததற்காக பிரமோஸ் திட்டத்தின் மேலாண்மை இயக்குனர் சிவதாணுபிள்ளைக்கும், பாஜ.வின் மூத்த தலைவரும் மத்திய கணக்கு தணிக்கை குழு தலைவருமான முரளி மனோகர் ஜோஷிக்கும் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி