இவர் பாராமதியில் நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்றார். மூத்த குடிமக்களுக்கான 3 கிலோமீட்டர் மராத்தான் பிரிவில் கலந்து கொண்டு ஓடினார். அதை விட முக்கியமானது இவர் வெற்றி பெற்றதுதான். 66 வயதில் பலரும் வேகமாக நடக்கவே பயப்படுவார்கள். பொடி நடையாக வாக்கிங் மட்டுமே போவார்கள். ஆனால் இந்தப் பாட்டியோ மின்னல் வேகத்தில் புடவையுடன் ஓடியதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போயினர்.
அவர் மகாராஷ்டிரப் பெண்கள் அணியும் பாரம்பரிய உடையில் இவர் கலந்து கொண்டார். காலில் செருப்பு கூட கிடையாது. இவருக்கு ரூ. 5000 பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் 4 பிரிவுகளில் மொத்தம் 4000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவரும் பாட்டியை ஹீரோயின்
ஆக பார்த்தனர் .
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி