மகனை கொன்ற தாய்…

மகனை கொன்ற தாய்… post thumbnail image
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரை அடுத்துள்ள நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் திருப்பதி. இவருடைய மகள் சரிதா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜன் என்பவருக்கும் கடந்த சிலஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இத்தம்பதியினருக்கு 3 வயதில் பாரதிதாசன் என்ற லிவிங்ஸ்டன் என்ற மகன் இருந்தான்.

குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜனும், சரிதாவும் திருமண வாழ்வில் இருந்து பிரிந்து விட்டனர்.ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த கருப்பசாமியின் மகன் உத்திரசெல்வத்திற்கு சரிதாவை மறுமணம் செய்தனர் . உத்திரசெல்வத்திற்கு ஏற்கனவே திருமணமான நிலையில் அவரது மனைவி இறந்து விட்டார்.

உத்திரசெல்வம் தனது மனைவி, குழந்தை பாரதிதாசனுடன் அருகிலுள்ள தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். செல்லும் வழியில் பாரதிதாசன் தவறி விழுந்து இறந்துவிட்டான் என்று கூறி கணவன், மனைவி இருவரும் பாரதிதாசன் உடலை அடக்கம் செய்ய முயன்றனர். போலீசார் விரைந்து வந்து இறந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் முடிவில், சிறுவன் பாரதிதாசன் விஷம் கொடுத்தும், நெஞ்சில் காலால் மிதிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து புதியம்புத்தூர் போலீசார் கணவன், மனைவி இருவரையும் சிறுவனை கொன்ற வழக்கில் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு தூத்தக்குடி 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை எல்லாம் ஏற்கனவே முடிந்த நிலையில் நீதிபதி பால்துரை பெற்ற மகனையே விஷம் கொடுத்தும், மிதித்தும் கொன்று தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய சரிதா, அவரது கணவன் உத்திரசெல்வத்திற்கு ஆயுள்தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி