திரையுலகம்,முதன்மை செய்திகள் ஏறிய ஹீரோயின் விழுந்த ஹீரோ …

ஏறிய ஹீரோயின் விழுந்த ஹீரோ …

ஏறிய ஹீரோயின் விழுந்த ஹீரோ … post thumbnail image
உனக்கு 20 எனக்கு 40 என்ற படத்தின் ஷூட்டிங்கின் கொடைக்கானலில் நடந்து வருகிறது .ஹீரோயினின் தந்தை மீது ஹீரோயினின் தோழிக்கு காதல் வருகிறதாம். அது என்னாகிறது, என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் ஹீரோயின்களாக ஷாலினியும், அம்ருதாவும் நடிக்கிறார்கள்.இதில் ஷாலினியின் தந்தை மீதுதான் அம்ருதா காதல் கொள்கிறார்.இப்படத்தின் ஒரு பாடல் காட்சியை சமீபத்தில் கொடைக்கானலில் படமாக்கினர். அப்போதுதான் ஹீரோ அக்ஷயின் இடுப்பின் மீது ஷாலினி ஓடி வந்து ஏறுவது போன்ற காட்சியை எடுத்தனர் .

வேகமாக ஓடி வந்து ஷாலினி அக்ஷய்இடுப்பின் மீது தவ்வி உட்கார்ந்தார். ஆனால் அப்போது பாரம் தாங்க முடியாமல் அக்ஷய் கீழே விழ, அவர் மீது ஷாலினியும் விழுந்தார்.விழுந்த வேகத்தில்இரண்டு பேருக்குமே அடிபட்டு விட்டது. படக்குழுவினர் ஓடி வந்து இருவரையும் தூக்கி விட்டனர். காலை உதறச் செய்தனர். பின்னர் முதலுதவிக்குப் பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர்.ஹீரோ கூட லேசான காயத்துடன் தப்பி விட்டார். ஆனால் ஹீரோயின் ஷாலினிக்குத்தான் இடுப்பில் பலத்த அடிபட்டு காயமாகி விட்டதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி