ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் முதலைகளைக் கண்காணிப்பதற்காக வைக்கப் பட்ட சிறிய கேமராவைத் தூக்கிச் சென்றது ஒரு கழுகு .மார்க்கரெட் ஆற்று பகுதியில் முதலைகளை கணக்கிடுவதற்காக சென்சார் பொருத்தப்பட்ட கேமராவை வைத்திருந்தனர் வன ஆர்வலர்கள்.
சுமார் 10 முதல் 15 செ.மீ. நீளமும், 5 செ.மீ. அகலமும் கொண்ட இந்தக் கேமரா, நீரில் விழுந்தாலும் பாதிக்காமல் இயங்க கூடிய திறனைப் பெற்றது. திடீரென சில தினங்களுக்கு முன்னர் அந்தக் கேமரா மாயமானது. கேமரவைத் தேடும் பணியில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள் சுமார் 110கிமீ தாண்டி கேமரா கிடப்பதைக் கண்டறிந்தனர்
வனப்பகுதிக்குள் மேரி ஆற்றின் அருகே கிடந்த அந்த கேமராவை கைப்பற்றிய அதிகாரிகள், அவற்றில் காட்சிகள் பதிவாகியிருப்பதைக் கண்டு ஆச்சர்யமடைந்தனர். அதில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்த போது, கேமராவை கழுகு ஒன்று தூக்கிச் சென்றது தெரிய வந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி