திரையுலகம்,முதன்மை செய்திகள் தல பொங்கல் விருந்து வீரம் …

தல பொங்கல் விருந்து வீரம் …

தல பொங்கல் விருந்து வீரம் … post thumbnail image
அஜீத் குமார் நடிக்க விஜயா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் திருமதி பாரதி ரெட்டி மற்றும் திரு வெங்கட்ராம ரெட்டி தயாரிக்க, சிவாவின் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க மிக பிரம்மாண்டமாக தயாராகும் வீரம் படத்தின் இசை இம்மாதம் 20ஆம் தேதி வெளியாகிறது.

ஜுங்கலீ மியூசிக் இசை நிறுவனம், படத்தின் இசையை வெளியிட உள்ளது. படம் ஜனவரி 10ம் தேதி ரிலீஸாகிறது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அஜீத் குமாருடன் தமன்னா இணைந்து நடிக்கும் படத்தில் அஜீத் ரசிகர்களை கவரும் வண்ணம் மாஸ் பாடல்களை தேவிஸ்ரீ பிரசாத் வழங்கி உள்ளார் , அவரது இசை பயணத்தில் இந்த படம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று இயக்குனர் சிவா நம்பிக்கை தெரிவித்தார்.

ஜனவரி 10ஆம் தேதி உலகெங்கும் வெளி வரும் வீரம் படம், பாடல்களில் மட்டுமின்றி , கதை அமைப்பிலும், காட்சி அமைப்பிலும் மிக பிரம்மாண்டமாக , ஜனரஞ்சகமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி