குறிப்பாக செய்தி சேனல்கள். குடும்பங்களை கூட்டி வைத்து
பஞ்சாயத்து செய்யும் நிகழ்ச்சிகளால் மறைக்கப்பட்ட சில கொலைகள் வெளிவர போலீஸ் சேனலுக்குள் நுழைந்தது. சேனல் வளாகத்திலேயே அடிதடி கலாட்டா மறியல்கள் நடந்தது…
அதற்கு பிறகு ஒரு சேனல் செய்தி வாசிப்பாளர் மேலேயே முதன் முறையாக அவதூறு வழக்கு பாய்ந்தது. இப்போது ஒரு சேனல் விவாத நிகழ்ச்சியில் கலந்த கொண்டு கருத்துச் சொன்ன தமிழ் ஆசிரியர், காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏவை போனில் கடுமையாக விமர்சித்து பேச… ஆசிரியர் இப்போது புழலில் இருக்கிறார்.
செய்தி சேனல்களுக்கு 24 மணிநேரமும் நிகழ்ச்சிக்கான புட்டேஜ் தேவைப்படுகிறது. இதனால் நான்கு பேர் உட்கார்ந்து தீவிரமாக பேசுகிறார்கள். அப்படியான நிகழ்ச்சியில் வில்லங்க டாபிக் பேசும்போது சிக்கலாகிவிடுகிறது. …
காவல் துறையில் உள்ள சைபர் க்ரைம் பிரான்ஞ் இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்காணிக்க தனி குழுவை அமைத்திருப்பதாக கூறுகிறார்கள். இதை எப்படி சமாளிப்பது என்ற கலக்கத்தில் சேனல்கள் இருக்கிறது….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி