திரையுலகம்,முதன்மை செய்திகள் ரம்மி ஆட தயாராகும் விஜய் சேதுபதி…

ரம்மி ஆட தயாராகும் விஜய் சேதுபதி…

ரம்மி ஆட தயாராகும் விஜய் சேதுபதி… post thumbnail image
விஜய் சேதுபதி தன் கலைசேவையை “தென்மேற்கு பருவக்காற்று” படத்தில் ஆரம்பித்து “பீட்சா”, “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்”, “சூதுகவ்வும்” மற்றும் “இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என்று அடுத்தடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து கொண்டிருக்கிறார். இவருடைய அடுத்த படமான “ரம்மி” வெகு வேகமாக வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. “ரம்மி” திரைபடத்தில் விஜய் சேதுபதி கதைக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மற்றொரு நடிகருடன் இணைந்து நடித்துள்ளார், இந்த திரைபடத்தை புதிய இயகுனரான பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். பொதுவாகவே அவர் நடிக்கும் திரைப்படங்கள் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இருக்கும் இந்த படமும் அதற்கு விதிவிலக்கு இல்லாமல் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைபடத்தை பற்றி விஜய் சேதுபதி கூறும் பொழுது, இதற்கு முன்பு நான் நடித்த படங்களில் இருந்து முற்றிலுமாக மாறுபட்ட கதையில் இப்படம் உருவாகியுள்ளது என்றும் படத்திற்கான கதை ரெடி பண்ணுவது, படத்தில் நடிப்பதை விட, அதை நல்ல முறையில் விளம்பரம் செய்து ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்வதே இன்றைய நிலையில் கடினமான விசயம் என்பதால், படத்தை நல்ல கம்பெனியிடம் ஒப்படைத்து ரிலீஸ் செய்து விட வேண்டுமென்று ஜேஎஸ்கே பிலிம்ஸ் சதீஸ்குமாரிடம், தனது படத்தை வாங்கி வெளியிடுமாறு கேட்டுக்கொண்டாராம்.

ஜேஎஸ்கே பிலிம்ஸ் சதீஸ்குமார் வேறு யாரும் இல்லை, பரதேசி, தங்கமீன்கள் உள்பட பல தரமான திரைப்படங்கள் வெளி வர காரணாமாய் இருந்தவர். ரம்மி திரைபடத்தை விஜய் சேதுபதி கேட்டுக்கொண்ட ஒரே காரணத்துக்காக, அந்த படத்தை கூட பார்க்காமல், ஒரு பத்து நிமிடம் அவர் சொன்ன கதையை மட்டும் நம்பி படத்தை வாங்கி வெளியிடுகிறாராம். இதுவரை விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த திரைப்படங்கள் செய்யாத அளவிற்கு பிரமாண்டமாக விளம்பரம் செய்து இந்த திரைபடத்தை வெளியிட போகிறாராம்.

நமது கேள்வி என்னவென்றால், விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார் என்றாலே ஒரு விளம்பரம் தான்…எதற்கு அவர் படத்திற்கு பிரமாண்ட விளம்பரம் வேண்டும் என்று தெரியவில்லை. நல்ல நடிகனை ரொம்ப நாளைக்கு கோலிவுட் விட்டு வைக்காது போலும். அவரே விளம்பரம் தான் முக்கியம் என்ற நிலைக்கு வந்து விட்டார் போல் இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி