பொருளாதாரம்,முதன்மை செய்திகள் டி.வி.எஸ். மோட்டார் லாபம் பிச்சுகிச்சு…

டி.வி.எஸ். மோட்டார் லாபம் பிச்சுகிச்சு…

டி.வி.எஸ். மோட்டார் லாபம் பிச்சுகிச்சு… post thumbnail image

டி.வி.எஸ். மோட்டாரின் லாபம் 97% சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் இந்த குழுமத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்தது ஒரு காரணமாகும். டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் செப்டம்பருடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.89 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டை விட 97 சதவீதம் அதிகமாகும். நிகர வருவாய் ரூ.1,683 கோடியிலிருந்து ரூ.1,962 கோடியாக உயர்ந்துள்ளது.

மோட்டார் பைக்குகளின் விற்பனையில் ஏற்பட்ட விறுவிறுப்பாலும், குழும நிறுவனம் ஒன்றில் இருந்த பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்ததாலும் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் நிகர லாபம் நல்ல வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிகிறது. இந்நிறுவனத்தின் இயக்குனர் குழு நடப்பு நிதி ஆண்டிற்கு, பங்கு ஒன்றுக்கு 65 சதவீத இடைக்கால டிவிடெண்டு அறிவித்துள்ளது. இதன்படி ஒரு பங்கிற்கு ரூ.0.65 கிடைக்கும். இடைக்கால டிவிடெண்டுக்காக இந்நிறுவனம் ரூ.36.13 கோடி செலவிட உள்ளது. இதில் டிவிடெண்டு விநியோக வரியும் அடங்கும்.

பங்கு சந்தையில் இந்த பங்குகளின் விற்பனையில் பெரிய மாற்றம் இருக்கும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி