தமிழ்நாடு,கேரளா,மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநில பெண்களை டெல்லியில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது இந்த ராஜு தான். இந்த பெயரை கொண்டவர் ஒருவரா அல்லது பலர் இந்த பெயரை பயன்படுத்தி இந்த வேலையை செய்கின்றனரா என்று காவல் துறை அதிகரிகளுக்கே புரியாமல் பெரும் குழப்பத்தில் இருகின்றனர். ராஜு என்கின்ற நபரின் புகைப்படம் இதுவரை சிக்கவே இல்லை மேலும் மீட்கப்பட்ட பெண்களுக்கும் அவனை சரியாக அடையாளம் கூறத் தெரியவில்லை.
டெல்லிக்கு பெண்களை அழைத்து வந்து அவர்களை பாலியல் தொழில் நடத்துவோரிடம் ரூ.20,000 முதல் ரூ.5 லட்சம் வரை விற்றுவிடுவதையே தொழிலாக செய்து கொண்டிருக்கிறான். இளம்பெண்கள் குறிப்பாக நேபாள பெண்களை அதிக அளவில் இந்த தொழிலில் ஈடுபடுத்துகிறார்களாம். காரணம் அவர்களின் சிவந்த மேனி. டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு பாழும் தொழிலில் தள்ளிவிடப்படும் பெண்கள் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவும், இந்தி மொழி தெரியாதவர்களாகவும் உள்ளனர். டெல்லி காவல் துறையினர் கடந்த பல ஆண்டுகளாக இந்த ராஜுவை தேடி வருகிறார்கள் ஆனால் அவன் சிக்கவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி