திரையுலகம்,முதன்மை செய்திகள் பத்த வைச்சுடீயே! பரட்ட லிங்குசாமியின் லிங்க்ஸ்….

பத்த வைச்சுடீயே! பரட்ட லிங்குசாமியின் லிங்க்ஸ்….

பத்த வைச்சுடீயே! பரட்ட  லிங்குசாமியின் லிங்க்ஸ்…. post thumbnail image
பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான லிங்குசாமியின் அலுவலகத்தில் வருமானவரி துறையினர் தீடீர் சோதனை நடத்தியுள்ளனர். சோதனையின் போது நடிகர் நடிகைகளுக்கு தந்த சம்பளத்துக்கு லிங்குசாமி வரி செலுத்தாததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அலுவலகங்கள் மற்றும் இல்லாமல் அவரது வீடுகளிலும் அதிரடியாக சோதனை தொடர்கிறது. பல வெற்றி திரைப்படங்களை லிங்குசாமி தன் சகோதரர் சுபாஷ் சந்திரபோசுடன் இணைந்து தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Lingusamy-Brothers

இந்த ஆண்டு ஒரே நேரத்தில் ஆறு திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். அதே போல் கடந்த வருடம் அதிக தமிழ் திரைப்படங்களைத் தயாரித்தது இவர்கள் நடத்து திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தான். ஒரே நாளில் அனைவரையும் திகைக்க வைக்கும் வகையில் இவர்கள் தயாரிக்கும் மூன்று திரைப்படங்களின் அறிவிப்புகள் பத்திரிகைகளில் பெரும் செலவு செய்யப்பட்டு விளம்பரம் வெளியாகியிருந்தன. குறிப்பாக கமல் நடிக்கும் உத்தம வில்லன், சூர்யா நடிக்கும் படம் மற்றும் கோலிசோடா போன்றவை குறிப்பிடதக்கது.

டெல்லியிலிருந்து வந்திருந்த அதிகாரிகள் நேற்று இரவு முழுவதும் விடிவிடிய சோதனை நடத்தினர் அப்போது ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த சோதனையில், பல கோடி ரூபாய்க்கு லிங்குசாமி வரி கட்டாதது தெரிய வந்துள்ளது, படத்தயாரிப்புக்கென்று செலவழித்த தொகை குறித்து முறையான கணக்கு வழக்குகள் இல்லாததையும் பார்த்த அதிகாரிகள் லிங்குசாமியின் பல கணக்கு வழக்குகளை அலச ஆரம்பித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி