திரையுலகம்,முதன்மை செய்திகள் நடுத்தெருவுக்கு வந்த மிஸ்கின்….

நடுத்தெருவுக்கு வந்த மிஸ்கின்….

நடுத்தெருவுக்கு வந்த மிஸ்கின்…. post thumbnail image
தமிழ் திரையுலகில் திரைப்படம் எடுப்பது மிக எளிதாகிவிட்டது ஆனால் எடுத்த திரைபடத்தை வெளியிடுவதற்குள் அவர்கள் படும்பாடு இருகிறதே….கொஞ்ச நஞ்சம் இல்லை. பல தடைகளை தாண்டி படத்தை வெளியிட்டுவிட்டாலும் இரு வாரங்களுக்கு அதை ஓட்டுவதற்கு விளம்பரங்களுக்கு மட்டும் இரண்டு கோடி ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்கிறது. மிஸ்கின் சொந்தமாக தயாரித்த ‘ஓநாயும் ஆட்டுக்குட்டி’யும் வெளிவந்து ஒருவாரமாகியும் கோயம்புத்தூரில் அந்தப்படம் வெளிவந்ததிற்கான அடையாளமே இல்லையாம். அதை சரி செய்ய தான் ஒரு நல்ல படம் எடுத்து நடுத்தெருவுக்கு வந்துள்ளார் மிஸ்கின்.

திரைபடத்தை பிரபல படுத்துவதற்காக கோயம்புத்தூக்கு போனவர் தனது படத்தின் சுவரொட்டிகள் எங்கும் இல்லாதது கண்டு கடுப்பாகிவிட்டார். என்ன செய்வது ஒட்டக் கொடுத்த சுவரொட்டிகளை சுவர்களில் ஒட்டினால் தானே பொது மக்களுக்கு தெரியும். மசாலா திரைபடத்திற்கு காணும் வசூல் வராத காரணத்தினால் திரையரங்க உரிமையாளர்கள் அவரது படத்தின் சுவரொட்டிகளை ஒட்டாமல் ஒருவார கணக்குக்கு படத்தை ஓட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். நிலைமையை நேரில் பார்த்து நொந்து போன மிஷ்கின் வேறு வழியில்லாமல் தானே முன்வந்து அதிகாலை மூன்று மணி வாக்கில் தனது படத்தின் சுவரொட்டிகளை சுவர்களில் சாலையோர ஒட்ட கிளம்பியிருக்கிறார். இது தான் மிஸ்கின் நல்ல படம் எடுத்து நடுத்தெருவுக்கு வந்த கதை. மதுரை, திருச்சி, சேலம், புதுக்கோட்டை, காரைக்குடி, என தமிழகத்தின் எல்லா முக்கியமான பகுதிகளுக்கும் மிஸ்கினின் விஜயம் இருக்கும் போல் தெரிகிறது. இது கொஞ்சம் நெருடலான விசயம் தான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி