அரசியல் அடடா… எண்ணெய் போச்சே….

அடடா… எண்ணெய் போச்சே….

அடடா… எண்ணெய் போச்சே…. post thumbnail image
ஆட்டை கடித்து மாட்டை கடித்தது போல் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு ஒட்டு மொத்த இந்தியாவையும் பாழாக்கிவிட்டது. ஈழத்தில் காட்டிய வேகத்தையும் விவேகத்தையும் அதனால் நடந்தேரிய இனப்படுகொலைகளையும் நாம் நன்கு அறிவோம். எதை பற்றி எழுத ஆரம்பித்தாலும் ஈழத்தை தவிர்க்க முடியவில்லை. உலகமே எண்ணெய் வளங்களுக்காக போர் நடத்தி கொண்டிருக்கும் கால கட்டத்தில் சோவியத் ரஷ்யாவிலிருந்து பிரிந்து தற்பொழுது தனி நாடக இருக்கும் கஜாகிஸ்தானின் அருகே கேஸ்பியன் கடலில் 30 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்படாத மாபெரும் எண்ணெய் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000ம் ஆண்டில் தான் இங்கு கச்சா எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, 1968ம் ஆண்டு அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் புருடோ பே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் படுகைக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய கச்சா எண்ணெய் படுகை இது தான். சீன அரசு நமது இந்திய ரூபாய் மதிப்பில் 30,000 கோடி வரை கொட்டி இந்த எண்ணெய் உற்பத்தி மையத்தின் பெரும் பங்குகளை கஜாகிஸ்தானிடம் இருந்து வாங்கிவிட்டது இந்த இடத்திலிருந்து சீனாவுக்கு பைப் மூலமே கச்சா எண்ணெய் அனுப்பப்படவுள்ளது.

பத்து ஆண்டுகளாக இந்தியவை ஆண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசால் இதில் முதலீடு செய்ய முடியவில்லை சீன அரசின் விவேகத்திற்கு முன் காங்கிரஸ் அரசின் எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. முற்றிலும் தோல்வியை தழுவிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசு ஈழ இனப்படுகொலைகளை மட்டும் எவ்வளவு சாமர்த்தியமாக நடத்தியது என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி