இயக்குனர் செல்வராகவன் தான் இயக்கும் படங்களின் படப்பிடிப்பை இந்தியாவுக்குளேயே படமாக்கிவிடுவார், அனாவசியமாக வெளிநாட்டு படப்பிடிப்பை நடத்தமாட்டார், ஆனால் இந்த முறை செல்வராகவன் தான் இயக்கும் இரண்டாம் உலகம் திரைபடத்தின் பெரும்பான்மையான காட்சிகளை ஜார்ஜியாவில் படமாக்க முடிவு செய்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் ராம்ஜியும் செல்வராகவனும் சமீபத்தில் ஜார்ஜியாவுக்கு சென்று அங்கு படப்பிடிப்பு நடத்த இடங்களை தேர்வு செய்துள்ளனர். வரும் ஜூன் 15ம் தேதி படத்தின் கதாநாயகன் ஆர்யா மற்றும் கதாநாயகி அனுஷ்கா என முழு படக்குழுவினரும் ஜார்ஜியா நாட்டிற்கு செல்ல திட்டமிட்டுப்பட்டுள்ளது. அங்கு சுமார் 2 மாதங்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
இரண்டாம் உலகம் படத்தின் மொத்த படப்பிடிப்பும் இந்த வெளிநாட்டு படப்பிடிப்புடன் முடிவடைந்து விடும் என்றே தெரிகிறது, இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. இன்னொரு சிறப்பு என்னவென்றால் கதாநாயகன் ஆர்யா கதாநாயகி அனுஷ்கா என இருவருக்குமே இரட்டை வேடங்கள். முதன் முறையாக ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குனர் செல்வராகவனுடன் இணைகிறார். அறிவுப்பு:- கார்த்தியின் சகுனி திரைப்பட பாடல்கள் MP3 Songs download…Click here…
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.