வின்னர் படத்தில் வடிவேலு உருவாகிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் இன்று ஒரு திரைபடத்தின் தலைப்பாக மாறி இருக்கிறது, நடிக்க போவது நம்ம பாஸ் என்கிற பாஸ்கரன் ஆர்யா தான். இது ஹிந்தியில் சூப்பர் ஹிட் ஆன டெல்லி பெல்லி படத்தின் தமிழ் பிரதி,பல தலைப்புகளை தேர்ந்தெடுத்து கடைசியில் இந்த தலைப்பை முடிவு செய்துள்ளனர்.
இப்படத்தில் ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி சேர்ந்து பட்டையை கிளப்ப போகிறார்கள், இந்த படத்திற்காக, கலை இயக்குநர் விதேஷ் 1 கோடி ரூபாயில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்று செட் அமைத்து அசத்திவிட்டாராம்.
இப்படத்தில் அஞ்சலி மற்றும் ஹன்சிகா மோத்வானி ஆகியோர் கதாநாயகியாக நடிக்க, நாசர் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் கண்ணன் இயக்குகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.