களவாணி, வாகைசூட வா படங்களை இயக்கிய இயக்குனர் சற்குணம் தனது மூன்றாவது படைப்பாக இயக்க போகும் திரைப்படம் சொடல வாழைக்குட்டி. பெயரே ஒரு மாதிரியாக இருக்கிறது அல்லவா… அதை விட சுவாரிசியமான விஷயம் இந்த படத்தில் நடிக்க போவது கொலைவெறி தனுஷ்.
இந்த படத்தில் நடிக்க விக்ரம், தனுஷ் ஆகியோரது பெயர் அடிப்பட்ட நிலையில், இறுதியில் தனுஷ் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கதைப்படி கதாநாயகன் கொஞ்சம் இளைஞராக இருக்கவேண்டும் அதனால் தான் விக்ரமை தவிர்த்து தனுசை உறுதி செய்ய பட்டதாக தகவல்.
துறுதுறு என இருக்கும் இளைஞர்களை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாக இருக்கிறது. தனுஷ்-சற்குணம் கூட்டணியில் இணையும் இப்படத்தை வி.கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறார்.
சொடல வாழைக்குட்டி என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளீர்களே என்று சற்குணத்திடம் கேட்டபோது, வளர்ந்து வரும் மாறுபட்ட கலாச்சாரத்தால் நம்முடைய வட்டார வழக்கு சொற்கள் பெரும்பாலும் அழிந்து வருகிறது. அதனை இக்காலத்தை சேர்ந்தவர்களும் தெரிந்து கொள்ளும் விதமாக என்னுடைய படங்களுக்கு இதுபோன்ற தலைப்புகளை வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் தனுஷ் படம் தவிர, தன்னுடைய இளைய சகோதரர் தயாரிப்பில், மீண்டும் விமலை வைத்து ஒரு படம் எடுக்கவும் இருக்கிறார் சற்குணம் திட்டமிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.