மதுபானக்கடை படத்தில் கதை ஏதும் கிடையாது. அதையும் மீறி கதை… அது இது என்று ஏதாவது எழுதப்பட்டால் அது எழுதுபவருடைய சொந்த கற்பனையாகத்தான் இருக்க முடியும் என்கிறார் மதுபானக்கடை படத்தின் இயக்குநர் கமலக்கண்ணன்.
புதுமுகங்களை வைத்து இந்தப் படத்தை இவர் இயக்கினாலும் படத்தைப் பொறுத்தவரை படத்தின் ஹீரோ மதுபானக்கடைதானாம். ஈரோடு பக்கத்தில் இவர்கள் போட்ட மதுபானக்கடை செட்டைப் பார்த்து நிறைய பேர் அங்கு மது வாங்க வந்திருக்கிறார்கள்.
அவர்கள் பாட்டில் கேட்ட போது படக்குழுவினரோ இது ‘படப்பிடிப்பு நடக்கிற இடம்…’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் நம்ப மறுத்துவிட்டார்களாம் அந்த பகுதி குடிமகன்கள். சில குடிமக்களோ மதுபானக்கடை பார் செட்டின் உள்ளே உட்கார்ந்து நன்றாக தண்ணி அடித்துவிட்டு போனார்களாம்.
நிஜ டாஸ்மாக் கடை என்று எண்ணி குடிமகன்கள் வந்து போனதில் மதுபானக்கடை டீமினர்க்கு ரொம்பவே சந்தோசம். பட்ஜெட் படமாக இருந்தாலும் படம் பேசப்படுகிற அளவுக்கு நன்றாகவே வந்திருக்கிறது என்கிறது மதுபானக்கடை படக்குழு.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.