திரையுலகம்,முதன்மை செய்திகள் அசினை விரட்டியடித்த ஈழத்தமிழர்கள்…

அசினை விரட்டியடித்த ஈழத்தமிழர்கள்…

Actress asin in Srilanka

காணொளி:-

ராஜபக்சேவின் விருந்தினராக இலங்கையில் உறவாடி வந்தவரான நடிகை ஆசின், விக்ரம் நடிக்கும், ஷங்கர் இயக்கும் படத்திலிருந்து தூக்கப்பட்டு விட்டார். அவருக்குப் பதில் பாணா காத்தாடி பட நாயகி சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈழத் தமிழர்கள், ஈழ ஆதரவாளர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது தான் இதற்கு காரணம்.

ஈழத்தில் போர் முடிந்து, பல லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட பி்ன்னர் இந்தியத் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் இலங்கையில் நடந்த திரைப்பட விழாவை காரணம் காட்டி இலங்கைக்கு ஓடினர். அத்தனை பேரையும் ராஜபக்சேவும் அவரது அரசும் இரு கரம் நீ்ட்டி வரவேற்று விருந்து வைத்து உல்லாச படுத்தி அனுப்பி வைத்தார். சல்மான் கான்,அசின் என ஒரு பட்டாளமே அங்கு போய் விருந்தாடி வந்தனர்.

சல்மானுடன் ரெடி படத்தில் நடித்த அவர் அந்த திரைபடத்தின் ஷூட்டிங் இலங்கையி்ல் நடைப் பெற்றதை காரணம் காட்டி அங்கு போனார். தமிழ்த் திரையுலகினர் யாரும் இலங்கைக்கு போகக் கூடாது என்று தமிழக திரையுலக கூட்டமைப்பு உத்தரவிட்டபோதும் அதையும் மீறிப் அங்கு போய் ஆட்டம் போட்டு விட்டு வந்தவர் ஆசின். பல பிரபலங்கள் இதற்கு கடும் கண்டனங்கள் அப்பொழுது எழுப்பி இருந்தனர். ஆனால் பாலிவுட் மோகத்தில் இருந்த அசின் சுத்தமாக கண்டு கொள்ளவில்லை. இதற்கு இடையில் அவர் இளைய தளபதி விஜய் படமான காவலன் படபிடிப்பில் பலரது அரவணைப்பில் எந்த வித பயமும் இன்றி நடித்து விட்டு போனார். இந்த நிலையில் ஷங்கர் இயக்க, விக்ரம் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் ஆசினை நாயகியாககப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு ஈழ ஆதரவாளர்கள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.

ஹிந்து மக்கள் கட்சி ஷங்கர் வீட்டை முற்றுகையிடப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. இதையடுத்து தற்போது ஆசினை தூக்கி விட்டதாகவும், சமந்தா நாயகியாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாணா காத்தாடியில் நடிகர் முரளி மகனான அதர்வாவுடன் இணைந்து நடித்தவர் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எதிர்ப்புகள் கொஞ்சமாவது அடுத்தவர்களுக்கு பாடமாக இருக்குமா…

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.