திரையுலகம்,முதன்மை செய்திகள் தல அஜித்துடன் அதிரடியாய் கை கோர்க்கும் நாகர்ஜுனா, ரவி தேஜா

தல அஜித்துடன் அதிரடியாய் கை கோர்க்கும் நாகர்ஜுனா, ரவி தேஜா

Tamil actor thala Ajith with Director Vishnuvardhan

காணொளி:-

தல அஜீத்தை வைத்து விஷ்ணுவர்தன் ஒரு படம் எடுக்கின்றார் அதில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, அரவிந்த்சாமி, பிரித்விராஜ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என்பது பழைய செய்தி. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்க போகிறார்கள். தமிழில் தல அஜித் இருக்கிறார் ஆனால் ஆந்திராவில் படத்தை ஓட்ட அங்குள்ள ஹீரோக்களை போட்டால் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பு வட்டம் நினைத்தாம்.

அதனால் தற்போது தல படத்தில் தெலுங்கு ஹீரோக்களான நாகர்ஜுனா மற்றும் ரவி தேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தெலுங்கில் வெளியாகும் படத்தில் இந்த இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களாம். தல படத்தில் நாகர்ஜுனா மற்றும் ரவி தேஜா சேர்த்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம். அதிரடியாய் ஆரம்பிக்க போகும் இந்த படம் பிரமாண்டத்திற்கு குறை இருக்காது என்றே தெரிகிறது. ஏ. எம். ரத்னம் மேற்பார்வையில், ஸ்ரீசத்யசாய் மூவீஸ் சார்பில் ரகுராம் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் வரும் 31ம் தேதி மும்பையில் துவங்குகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.