திரையுலகம்,முதன்மை செய்திகள் தனி பாடலாய் களமிறங்கும் கார்த்தியின் சகுனி

தனி பாடலாய் களமிறங்கும் கார்த்தியின் சகுனி

Tamil actor Karthi in Saguni

காணொளி:-

சிங்கிள் ஆடியோ டிராக் கலாச்சாரம் தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. அது இப்போது கார்த்தியின் படத்திலும் தொடர்கிறது. புதுமுகம் ஷங்கர் தயாள் இயக்கத்தில், கார்த்தி-ப்ரணீதா-சந்தானம் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதியபடம் சகுனி.

ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆகவேண்டிய இப்படம் பெப்சி பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகளால் இப்படத்தின் சூட்டிங் காலதாமதமானது. தற்போது படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

அத‌ில் முதற்கட்டமாக படத்திற்கான ஆடியோ ரிலீஸ் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. படத்தின் ஆடியோவை மொத்தமாக ரிலீஸ் செய்யாமல் ஒரே ஒரு பாடலை மட்டும் ரிலீஸ் செய்யவுள்ளனர். அதுவும் கார்த்தி பிறந்தநாளான மே 25ம் தேதி சிங்கிள் டிராக்கும், அதனைத்தொடர்ந்து மே 31ம் தேதி அனைத்து பாடல்களையும் ரிலீஸ் செய்யவுள்ளனர். ஜூன் மாதம் இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.