ஊழல்,கறுப்புப் பணம், சமூக மற்றும் தனி மனித ஒழுக்கமின்மையை தொடர்ந்து தன் படங்களில் குறிவைத்து சாடி வரும் இயக்குநர் ஷங்கர் அடுத்து கையில் எடுக்கபோகும் விஷயம் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் மோசமான வாக்காளர்களையும், அவர்களுக்கு பணத்தை அள்ளிவிடும் வேட்பாளர்களையும், விக்ரம் – பிசி ஸ்ரீராம் – ஏ ஆர் ரஹ்மான் என மீண்டும் ஒரு மெகா கூட்டணியோடு ஆரம்பிக்கும் தன் அடுத்த படத்தின் கதைக் களம் ‘ஓட்டுக்குப் பணம்’ என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்தப் பின்னணியில் ஆக்ஷன் – காதல் – காமெடி என்ற கட்டமைப்பில் திரைக்கதையை உருவாக்கி வருகின்றனர் எழுத்தாளர்கள் சுபா.
படத்தின் தலைப்பு ஒரு பட்டி மன்றமே நடக்கிறது ‘தேர்தல்’ என்று ஒரு பெயர் அடிபடுகிறது
பாலிவுட்டிலிருந்து ப்ரியங்கா சோப்ரா மாதிரி ஒருவரை இந்தப் படத்தில் ஹீரோயினாக்க வேண்டும் என முயற்சித்து வருகிறாராம் ஷங்கர். அது அசின் என்றும் ஒருபேச்சு அடிபட தொடங்கி இருக்கிறது. தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் என்கிறது ஒரு தரப்பு இல்லை என்கிறது மற்றொரு தரப்பு, யாராக இருந்தாலும் கேள்வி கேட்காமல் எக்கச்சக்க பணம் செலவழிக்கத் தயாராக இருக்க வேண்டும்…நமக்கு தெரியாத விசயமா அது….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.