திரையுலகம் சந்தனத்தின் அடுத்த அதிரடி…’கலகலப்பு’

சந்தனத்தின் அடுத்த அதிரடி…’கலகலப்பு’

kalakalappu-masalacafe

காணொளி:-

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து சந்தானம் நடித்து இருக்கும் படம் கலகலப்பு நடிப்புக்கு இடைவேளை விட்டு நீண்ட காலம் கழித்து சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவரும் படம் என பலத்த எதிர்பார்ப்புடன் திரைக்கு வருகிறது இந்த படம்.

உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, வின்னர் போன்ற முழுநீள நகைச்சுவை படங்கள் மட்டுமல்லாமல் சுந்தர்.சி படம் என்றாலே நகைச்சுவை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடித்த படங்களில் உள்ள காமெடி காட்சிகள் இப்போதும் சிரிப்பு சேனல்களில் அடுத்தடுத்து ஒளிபரப்பு ஆகிறது. அனைத்து நகைச்சுவை சேனல்களிலும் இது மிக மிக பிரபலம்.

சுந்தர்.சி உடன் முதன் முறையாக இணைந்து இருக்கிறார் சந்தானம். நகைச்சுவை நாயகர்களாக விமல், மிர்ச்சி சிவா, கிளாமரான கதாபாத்திரங்களில் அஞ்சலி, ஓவியா, இவர்களுடன் இணைந்து சந்தானத்தின் நகைச்சுவை காட்சிகள் இருப்பதால், இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தினை திரையுலகின் முன்னணி இயக்குனர்களுக்கு திரையிட்டு காட்டியிருக்கிறார்கள். அனைவருமே இப்படத்தினை பாராட்டியதாக தெரிவித்து இருக்கிறது யு.டிவி நிறுவனம். “ஜாலியாக வாங்க… ஜாலியாக போங்க” என்ற கலகலப்பு விளம்பரத்துடன் படம் திரைக்கு வந்துள்ளது .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி