திரையுலகம் கொழுக், மொழுக் ஹன்சிகா…இனி ஜீரோ சைஸ்…

கொழுக், மொழுக் ஹன்சிகா…இனி ஜீரோ சைஸ்…

hansika motwani in oru kal oru kannadi tamil film

காணொளி:-

கோலிவுட், டோலிவுட்டில் பெரிய நடிகர்களுடன் நடித்துள்ளவர் ஹன்சிகா அவர் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்த ஓ.கே. ஓ.கே. ஹிட்டானதையடுத்து அவருக்கு கோலிவுட்டி சிவப்பு கம்பளம் விரிக்க ஆரம்பித்துள்ளது. இப்போது சிம்புவுடன் 2 படங்கள், சூர்யாவுடன் சிங்கம் 2 என ரொம்பவே பிசியாகிவிட்டார்.

ஹன்சிகாவைப் பற்றி பேச்சு எடுத்தாலே நமக்கு நினைவுக்கு வருவது கொழுக், மொழுக் உருவம் தான் இது தான் அவரது அடையாளமாகிவிட்டது. மற்ற ஹீரோயின்கள் எல்லாம் உடலை சிக்கென்று வைக்க இவர் மட்டும் கொஞ்சம் ரொம்பவே வெயிட்டாகத் தான் இருக்கிறார். யார், என்ன சொன்னார்களோ தெரியவில்லை, கோலிவுட்டின் கனவுக் கன்னி என்று பெயர் வாங்கிய கையேடு அவர் பிளைட்டைப் பிடித்து அமெரிக்கா சென்றுவிட்டாராம். அங்கு உடல் எடையைக் குறைத்து சிலிம்மான பிறகு நாடு திரும்புப் போகிறாரம்.

தமிழ் ரசிகர்களுக்கு கொழுக், மொழுக் நடிகைகளை தான் ரொம்ப பிடிக்கும் என்பது பரவலான கருத்து…உடம்பை குறைத்து கோலிவுட்டின் கனவுக் கன்னி என்ற பெயரை எப்படி தக்க வைக்க போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி