திரையுலகம்,முதன்மை செய்திகள் கோச்சடையானுக்கு நோ சொன்ன AVM

கோச்சடையானுக்கு நோ சொன்ன AVM

Superstar Rajinikanth in Kochadaiyaan

ரஜினி தன் மகள் சௌந்தர்யா இயக்கும் கோச்சடையானில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. மற்ற படங்களை காட்டிலும் ரஜினி இந்த படத்தில் அதிக தீவிரம் காட்டி வருகிறார். படத்தின் தொழில் நுட்பம் குறித்த ஆலோசனை கூட்டங்களில் மிக ஆர்வமாகப் பங்கெடுத்து வருகிறார் சூப்பர் ஸ்டார்.

சௌந்தர்யா, ஏற்கனவே “கோவா” என்ற திரைபடத்தில் வெங்கட் பிரபுவை நம்பி நஷ்டம் அடைந்தது மேலும் சுல்தான் திரைபடத்தினால் செக் மோசடி அது இதுவென்று ரஜினியின் பெயரையும் சேர்த்து கிழிந்தது ரஜினியின் அடிமனதில் இன்னும் நீங்கவில்லை போலும்…அதனால் பட தயாரிப்பை A .V .M மிடம் கொடுத்துவிடலாம் என்று தனக்கு நெருக்கமான ஏவிஎம் சரவணனிடம் தனிப்பட்ட முறையில் கோச்சடையான் பற்றிப் பேசியுள்ளார் ரஜினி

ஆனால் A .V .M சரவணன் சினிமா தயாரிக்கும் அல்லது வேறு படத்தை வாங்கி விநியோகம் பண்ணும் நிலையில் இப்போது இல்லை என்று கையை விரித்து உள்ளார். “சினிமா நிலவரம் இப்பொழுது சரியில்லை ரஜினி. சினிமா தயாரிக்கும் மனநிலையில நாங்கள் இல்லை நீங்களே கேட்டும் என்னால் செய்ய முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்… ஸாரி” என்றிருக்கிறார் A .V .M சரவணன்.

அயன் படத்தை தயாரித்த A .V .M அதை வெளியீட்டு காசு பார்க்காமல் அடி மாட்டு விலைக்கு விற்றனர்….இப்பொழுது கோச்சடையானுக்கு “நோ” சொல்லி என்ன செய்யபோகிறார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

A .V .M நிலையே இப்படி என்றால் கோடம்பாக்கத்தின் நிலை சற்று சிரமம் தான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி