திரையுலகம் கொலவெறியை ஓரம் கட்ட போகும் பியார்கே ஆக்பிட்டாய்த்தே

கொலவெறியை ஓரம் கட்ட போகும் பியார்கே ஆக்பிட்டாய்த்தே

kolaveri equal song

கொலவெறி பாடலை ஓத்த பல பாடல்கள் வெளிவந்தாலும் அதனை ஓரம் கட்ட எந்த பாடலாலும் முடியவில்லை ஆனால் பல மாதங்களுக்கு பிறகு தற்பொழுது யூடியூபில் பத்து லட்சம் ஹிட்டுகளுக்கு மேல் ஒரு பாடல் கர்நாடகாவை கலக்கி கொண்டிருகிறது

பியார்கே ஆக்பிட்டாய்த்தே என்று ஆரம்பமாகும் அந்தப் பாடல் கன்னடம் மற்றும் உருது மொழி கலந்த ஏடாகூடமான வார்த்தைகளை பயன்படுத்தி இசையமைக்கபட்ட பாடலாகும்.

கோவிந்தாய நமஹ என்ற கன்னட திரை படத்தில் தான் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. இந்த பாடலும்,படமும் சூப்பர் ஹிட் ஆகி விட்டது.

இந்த ஆண்டின் மிகப் பிரபலமான கன்னடப் பாடலாக இது உருவெடுத்துள்ளதாம். இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளவர் குருகிரண் என்கின்ற இசையமைப்பாளர். இந்த பாடலை சேத்தன் மற்றும் இந்து நாகராஜ் சேர்த்து பாடியுள்ளனர்.

இந்த பாடலின் ஆரம்பம் பழைய சினிமா பாணியில் அமைந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி