சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பிளவு ஏற்பட்டத்தைத் தொடர்ந்து ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரால் உயிருக்கு ஆபத்து என்று முறையிட்டு காவல்துறையில் பாதுகாப்பு கோரியுள்ளனர்.
இதுபற்றி சினிமா தயாரிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹிம் ராவுத்தர் மாநகர காவல் ஆணையர் திரிபாதியிடம் கொடுத்துள்ள மனுவில் ” ஃபெப்சி, சினிமா தயாரிப்பாளர்களிடையே நடந்த பிரச்னையில் சங்கத்திற்கு எதிராக செயல்பட்டதாக எஸ்.ஏ.சந்திர சேகரன், தேனப்பன், கலைப்புலி தாணு ஆகியோரை 6 மாத காலத்திற்கு நீக்கியுள்ளோம்.
இந்நிலையில் இடைக்கால தலைவராக என்னை (இப்ராஹிம் ராவுத்தர்) உறுப்பினர்கள் நியமித்துள்ளனர். 3 பேரை நீக்கியதால், எங்கள் உறுப்பினர்களுக்கு அடியாட்கள் மூலம் ஆபத்து வர இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
எனவே எங்கள் உறுப்பினர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும். சங்கத்திற்கு எதிராக செயல்பட்டதால் தான் 3 பேரும் நீக்கப்பட்டுள்ளார்கள். அதற்கான அதிகாரம் இருப்பதால், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம் “. இவ்வாறு இப்ராஹிம் ராவுத்தர் தனது மனுவில் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி