திரையுலகம் பில்லா அஜீத்துடன் யுவன்…என்ன செய்றார்….

பில்லா அஜீத்துடன் யுவன்…என்ன செய்றார்….

Ajith,billa

புன்னகைப்பூவே படத்தில் முதல்முறையாக திரையில் தோன்றி பாடல் ஒன்றுக்கு யுவன் ஆடினார். ஆடினார் என்பது தவறான பதம். நடந்து கொண்டே தோளை குலுக்கினார் என்று சொல்லலாம்.

பில்லா 2 வில் மீண்டும் யுவன் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இதுதான் இப்போதைக்கு லேட்டஸ்ட்.

அ‌ஜித் நடிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தை ஆஹா ஓஹோ என்று அப்படத்தின் உதவி இயக்குனர்களே இணையத்தில் எழுதி பப்ளிசிட்டிக்கு விட்டுள்ளனர். பாட்டை கேட்டால் காதில் தேன் பாயும், படத்தைப் பார்த்தால் பரவசம் நிச்சயம் என்ற ‌ரிதியில் இவர்கள் எழுதும் கமெண்டை படித்தால் அமிர்தம் கொஞ்சம் அதிகமாகிவிட்டதோ என்று தோன்றுகிறது.

ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் இசைக்கு இரண்டு மடங்கு உழைப்பை தந்திருக்கிறார் யுவன். அவர் படத்தில் ஆடப் போவதை இதுவரை யாரும் உறுதி செய்யவில்லை.

மே 25 படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதால் இம்மாதம் பில்லா 2 ஆடியோ எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி