கன்னட சினிமா ஹீரோ சுதீப் – நடிகை சோனியா அகர்வால் இடையே காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ‘காதல் கொண்டேன்’ படத்தில் தனுஷுடன் நடித்தார் சோனியா அகர்வால். அப்போது அப்பட இயக்குனர் செல்வராகவனுடன் அவருக்கு காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு இவர்கள் பிரிந்தனர்.
கன்னடத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் சுதீப். இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்கிறார். சமீபத்தில் கன்னட பட ஷூட்டிங்குக்காக பெங்களூர் சென்ற சோனியா அகர்வாலுக்கும் சுதீப்புக்கும் நட்பு ஏற்பட்டது. இது இப்போது காதலாக மலர்ந் துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் விசாகப் பட்டினத்தில் நடிகர்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி நடந்தது. இதைப் பார்க்க சுதீப், சோனியா ஜோடியாக வந்திருந்தனர். கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி, போட்டிக்கு பின் நடந்த பார்ட்டி ஆகியவற்றிலும் இவர்கள் ஜோடியாக ஒரே காரில் வந்தனர். நிகழ்ச்சியிலும் பிரியாமல் ஒன்றாகவே இருந்தனர்.
“சண்டு என்ற கன்னட படத்தில் சேர்ந்து நடித்தபோதே இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. இப்போது இருவரும் நெருங்கி பழகி வருகின்றனர். இதை இருவருமே மறுக்கவில்லை. சோனியா சில படங்களில் நடித்து வருகிறார். அப்படங்களை முடித்தபின் இவர்களின் திருமணம் நடைபெறும்” என சுதீப்புக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர். தமிழ் நடிகை & கன்னட நடிகரின் காதல் விவகாரம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.