இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போரின் இறுதி கட்டத்தில் சரண்டைய வந்த விடுதலைப் புலிகள் பொறுப்பாளர்களை சுட்டுக் கொன்ற போர்க் குற்றத்தில் கூட்டுப் பொறுப்புடைவர் என்ற அடிப்படையில் பன்னாட்டு நீதிமன்றத்தில் ஐ.நா.விற்கான சிறிலங்க அரசின் நிரந்தரத் தூதரான பலித கோஹனா மீது வழக்கு தொடரப்படவுள்ளது.
இலங்கையில் போர் நடந்தபோது சிறிலங்க அரசின் செயலராக இருந்த பலித கோஹனா, ஆஸ்ட்ரேலியாவின் குடியுரிமையையும் பெற்றுள்ளார். அந்த அடிப்படையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதாக இனப் படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பும், சுவிட்சர்லாந்தின் ஈழத் தமிழர் பேரவையும் கூறியுள்ளன.
போர் நடந்துக்கொண்டிருந்தபோது அதனை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் பங்கேற்றதும், அதன் பிறகு சரண்டைய வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், அமைதிச் செயலகத்தின் பொறுப்பாளர் புலித்தேவன், படைத் தளபதி நரேஷ் ஆகியோர் கொல்லப்பட்டதற்கு, அவர்களை சுட்டுக் கொல்ல உத்தரவிட்ட சிறிலங்க இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் தளபதி ஷவேந்திர சில்வாவுடன், பலதி கோஹனாவிற்கும் கூட்டுப் பொறுப்பு உள்ளது என்று பன்னாட்டுச் சட்ட விதிகளை காட்டி இவ்வமைப்பினர் விளக்கியுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.