திரையுலகம் படுக்கை அறை காட்சி முகம் சுளித்த ஸ்ரேயா…

படுக்கை அறை காட்சி முகம் சுளித்த ஸ்ரேயா…

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

‘பயர்’, ‘வாட்டர்’ போன்ற படங்களை இயக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் தீபா மேத்தா. இவருடைய படத்தின் கதையம்சமும், காட்சிகளும் பரபரப்பும், கிளுகிளுப்பும் நிறைந்தவைகளாக இருக்கும். அதே சமயம் பெரும் எதிர்ப்புகளையும் சந்திக்கும். எது எப்படி நடந்தாலும் தனது பாணியை மட்டும் மாற்றிகொள்ளாத தீபா மேத்தா, மறுபடியும் ஒரு பரபரப்பு கதையம்சம் கொண்ட படத்தை இயக்கி வருகிறார்.

‘மிட் நைட் சில்ட்ரன்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படமும், பாலுறவை சித்தரிக்கும் படம்தான். இதில் ஹீரோயினாக நடிக்கும் ஸ்ரேயாவுக்கு வீட்டு வேலைக்கார பெண் கதாபாத்திரம்.

கதைப்படி அவரை ஒரு ஆசாமி கற்பழிக்க முயற்சிப்பாராம், அதற்காக படுக்கை அறை காட்சி ஒன்றை வைத்திருந்தாராம் இயக்குநர். அந்த காட்சியை ஸ்ரேயாவிடம் விளக்கியபோது அதில் நடிக்க மறுத்து விட்டாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.