திரையுலகம் ஏங்க சிம்புக்கு மட்டும் இப்படி நடக்குது…

ஏங்க சிம்புக்கு மட்டும் இப்படி நடக்குது…

simbu

சீவுனா சிக்குது. நடந்தா குத்துது. எங்க போனாலும் பின் தொடரும் இப்படிப்பட்ட பிரச்சனைகள்தான் சிம்புவின் பலமும் பலவீனமும்! கடந்த வாரத்தில் ‘சிவனே’ என்று பைக் ஓட்டிய சிம்புவை பிரச்சனையில் தள்ளி வேடிக்கை பார்க்க விட்டது விதி.

வானம் படத்தின் ஷ§ட்டிங் மெரீனா பீச் பகுதியில் நடந்து வந்தது. சிம்பு பைக்கை ஓட்டிக் கொண்டு வேகமாக வருவது போலவும், அவரை இன்னொரு கும்பல் பின் தொடர்வது போலவும் காட்சி. ரிகர்சல் பார்க்கும் போதெல்லாம் பிரச்சனையே இல்லை. டேக் போகும் போது திடீரென்று ஒரு பெரியவர் குறுக்கே வந்துவிட்டாராம்.
அவ்வளவுதான்… கண்ட்ரோல் இல்லாமல் அவர் மீது வண்டியை மோதி விட்டார் சிம்பு.

காத்து பலமா அடிச்சாலே கடலை பார்த்து முறைக்கிற பகுதி அது! சிம்புவை விட்டு வைப்பார்களா? விஷயத்தை முன் கூட்டியே அனுமானித்த படக்குழு, சரக்கென்று சிம்புவை அங்கிருந்த ஒரு ஆட்டோவில் ஏற்றி ஸ்பாட்டை விட்டு அவசரமாக அப்புறப்படுத்தினார்களாம். இன்னும் ஒரு வாரத்திற்கு சென்னை பக்கமே வராதீங்க என்று ஐதராபாத்துக்கும் அனுப்பி வைத்தார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.