தொலைநோக்குப் பார்வையுடன் இருக்க வேண்டிய கவர்னர் உரை, கொலைநோக்குப் பார்வையுடன் அமைந்திருக்கிறது’ என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:சட்டசபையில் கவர்னரால் வாசிக்கப்பட்ட உரை, தமிழகத்தை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்கின்ற அவல உரையாக அமைந்துள்ளது. ஐந்தாண்டுகளாக மின் உற்பத்தியை பெருக்கி, மின் பற்றாக்குறையை போக்காமல், ஆட்சி முடியும் தறுவாயில், சில திட்டங்களை குறிப்பிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கவர்னர் உரையில் குறிப்பிட்டிருப்பதை தி.மு.க., அரசின் நிர்வாக திறமையின்மையைத்தான் காட்டுகிறது.தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் குறித்து, கவர்னர் உரையில் ஏதும் குறிப்பிடவில்லை. கல்வி கட்டண குறைப்பு என்பது ஒரு ஏமாற்று வேலை என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதி திட்டம் உன்னதமான திட்டம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. செங்கல், மணல், ஜல்லி விலை விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கிறது.தி.மு.க., அரசால் கொடுக்கப்படும் பணத்தை வைத்து கழிவறை மட்டும் தான் கட்ட முடியும்.
தற்போதுள்ள சூழ்நிலையில் வீட்டு வசதி திட்டம் என்பதை கழிவறை திட்டம் என மாற்றிக் கொள்வதே பொருத்தமாக இருக்கும்.நதிநீர் இணைப்பு திட்டம், அண்டை மாநிலங்களுடான நதிநீர் பங்கீடு ஆகியவை கவர்னர் உரையில் இடம் பெறாதிலிருந்து, இவற்றை கருணாநிதி கைகழுவி விட்டார் என்பது தெளிவாகிறது. சட்டம் ஒழுங்கை சீர்படுத்தவும், தொழில் வளர்ச்சியை பெருக்கவும், விவசாய உற்பத்தியை பெருக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மணல் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல், கள்ள லாட்டரி சீட்டு விற்பனை போன்றவற்றை கட்டுப்படுத்தவும், விலைவாசியை குறைக்கவும் எந்தவித திட்டங்களும் இடம் பெறவில்லை. தொலைநோக்குப் பார்வையுடன் இருக்க வேண்டிய கவர்னர் உரை, கொலைநோக்குப் பார்வையுடன் அமைந்திருக்கிறது.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.