மத்திய ரெயில்வே துறை மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, மத்திய மந்திரி முகுல் ராய் ஆகியோர் இன்று டெல்லியில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானத்தில் பயணம் செய்தனர். அவர்கள் சென்ற விமானம் இரவு 8.15 மணிக்கு இந்திராகாந்தி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
வானத்தில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் திடீர் என்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விமானி, அந்த விமானத்தை டெல்லி விமான நிலையத்துக்கு திருப்பினார். பின்னர் அந்த விமானம், அவசரமாக முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தரை இறங்கியது. இதனால் மத்திய மந்திரிகள் உயிர் தப்பினார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.