ரெடி ஹிந்திப் படத்தில் காய்ச்சலோடு நடித்தேன் என்று நடிகை அசின் கூறினார். ரெடி இந்திப் படத்தில் சல்மான்கான் அசின் ஜோடியாக நடிக்கின்றனர். இந்தப் படத்தின்போது இருவருக்கும் காதல் மலர்ந்து, கல்யாணம் வரை போய்விட்டதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் இதை இருவரும் மறுத்துள்ளனர்.
இதுகுறித்து அசின் கூறியதாவது , ரெடி படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக இடைவெளியில்லாமல் நடக்கிறது. தினமும் காலை 6 மணிக்கே மேக்கப்போட்டு தயார் ஆகிறேன். இடையில் அரை மணி நேரம் மதிய சாப்பாடு, பிறகு மாலை 6 மணிவரை படப்பிடிப்பு.
ஓய்வில்லாமல் நடித்ததால் எனக்கு காய்ச்சல் வந்து விட்டது. கிளைமாக்ஸை 25 முக்கிய நடிகர்களை வைத்து எடுக்க ஏற்பாடு செய்திருந்தனர். படப்பிடிப்பை நிறுத்தினால் மீண்டும் அவர்களை ஒன்று சேர்ப்பது கஷ்டம் என்றார் தயாரிப்பாளர்.
வேறு வழியின்றி காய்ச்சலோடு நடித்தேன். அப்போது மணிக்கு ஒரு தடவை சல்மான்கான் டாக்டர்கள் சொன்னபடி மருந்து மாத்திரை கொடுத்தார். பழரசங்களும் கொடுத்தார். பெற்றோர் இல்லாத குறையை சல்மான் தீர்த்து வைத்தார். அவர் ரொம்ப நல்ல மனிதர். சல்மான் கானால்தான் சீக்கிரம் குணமானேன் என்றார் அசின்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.