படத்திற்காக சினேகா தூக்கிய துப்பாக்கியே துரு பிடித்துவிடும் அளவிற்கு படு தாமதமாகிக்கொண்டிருக்கிறது பவானி.
கிச்சா இயக்கி, தயாரித்துள்ள பவானியில் இருபது வருடங்களுக்கு முன் விஜயசாந்தி போட்ட அதே காக்கி சட்டையைதான் சினேகாவிற்கு மாட்டிவிட்டுள்ளார் கிச்சா. யெஸ்! வைஜெயந்தி ஐ.பி.எஸ் படத்தின் ரீமேக்தான் பவானி. சினேகா பிரமாதமா சண்டை போட்டிருக்காங்க. ஒரிஜினல் வைஜெயந்தியான் விஜயசாந்தியே பாராட்டி தள்ளிவிட்டார் என்றெல்லாம் பெருமை பேசிக்கொண்டிருந்தாலும், படம் போனியாகாமல் தத்தளித்துக்கொண்டிருக்கிறது.
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் என எல்லா திருநாள்களையும் ரிலீஸ் தேதியாக அறிவித்துவிட்டபோதிலும், உண்மையில் படம் எப்போது வரும் என்பது கிச்சாவுக்கே தெரியாத ரகசியமாக இருக்கிறது. கடந்த 24-ந்தேதி பவானி ரிலீஸ் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தாலும், அந்த தேதியிலும் படம் வெளியாகவில்லை. கதாநாயகிகள் போட்டி நிறைந்துவிட்ட இன்றைய சூழ்நிலையை சமாளிக்க ஆக்ஷன் ஏரியாவை பிடித்துக்கொண்டு தப்பித்துவிடலாம் என கனவு கண்டுகொண்டிருக்கும் சினேகாவின் திட்டமும் கிணற்றில் போட்ட இரும்பாகவே இருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.