5. ஆட்டநாயகன்
ஷக்தி ஆக்சன் ஹீரோவாக நடித்திருக்கும் முதல் படம். அவரது காதல் படங்களைப் போலவே இதற்கும் கலெக்சன் கம்மி. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் சென்னையில் 6.83 லட்சங்களை மட்டுமே வசூல் செய்துள்ளது.
4. சித்து பிளஸ் டூ
பாக்யராஜ் இயக்கி பாக்யராஜின் மகன் நடித்திருக்கும் படம். பாக்யராஜின் அடல் ஒன்லி காமெடி ஏக இருந்தும் ஒதுங்கித்தான் போகிறார்கள் ரசிகர்கள். சென்ற வார இறுதியில் இப்படம் ஏறக்குறைய 7 லட்சங்களை மட்டுமே வசூல் செய்துள்ளது. இதன் பத்து நாள் சென்னை வசூல் 31 லட்சங்கள்.
3. விருதகிரி
வசூலில் படம் அடித்து நொறுக்கிறது என்றெல்லாம் போஸ்டர் அடித்தாலும் விஜயகாந்தின் படத்தின் வசூல் ரொம்ப சுமார். பத்து தினங்களில் இப்படம் சென்னையில் 35 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி மூன்று நாள் வசூல் 7.73 லட்சங்கள்.
2. சிக்குபுக்கு
ஆர்யாவின் சிக்குபுக்கு அவரின் முந்தையப் படங்களைப் போல் இல்லாவிடினும் கலெக்சனில் பரவாயில்லை. சென்ற வார இறுதியில் 16.10 லட்சங்களை வசூலித்திருக்கும் இப்படம் இதுவரை சென்னையில் 1.24 கோடியை வசூலித்துள்ளது.
1. ஈசன்
மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான படம் என்பதை படத்தின் முதல் மூன்று நாள் வசூலே சொல்லிவிடும். சென்னையில் மட்டும் மூன்று தினங்களில் இப்படம் 47.83 லட்சங்களை வசூலித்துள்ளது. வரும் நாட்களில் இந்த கலெக்சனை ஈசனால் தக்கவைத்துக் கொள்ள முடியாது என்பதே உண்மை
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி