ஹரி இயக்கத்தில் வேங்கை படத்தில் நடிக்கப் போனார் தனுஷ். கரைக்குடியிலும், பின் குற்றாலத்திலும் இடைவிடாது படப்பிடிபபு நடைபெற்றது. ரெஸ்ட் கிடைக்காததால் படப்பிடிப்புக்கு விடுமுறை கொடுத்துவிட்டு சென்னை வந்துவிட்டார் தனுஷ்.
அதன் பிறகு தயாரிப்பு தரப்பு இயக்குநரையும், கதாநாயகனையும் அழைத்து வைத்து பேசியது. பெண்டு நிமித்தினால் வேலை பார்க்க முடியாது என்றும், காலையில் ஒன்பது மணிக்கு ஆரம்பித்து மாலை நான்கு மணிவரை மட்டும் நடிப்பதாக இருந்தால் மட்டுமே நடிப்பதாக கதாநாயகன் தரப்பில் கூறியதால் மறுபடி படப்பிடிப்புக்கு தயார் என தெரிவிக்கப்பட்டது.
பாதி படம் முடிந்த நிலையில் பிரச்சனை எதற்கு என்று கதாநாயகன் வழியில் இப்போது, இயக்குநரும் சம்மதித்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி