திரையுலகம் மைனா,நந்தலாலா வரிசையில் தென்மேற்குப் பருவக்காற்று

மைனா,நந்தலாலா வரிசையில் தென்மேற்குப் பருவக்காற்று

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

தியேட்டர் கிடைக்கவில்லை, படம் ஓடவில்லை, கூட்டம் வரவில்லை, குடும்ப ஆதிக்கம் என்றெல்லாம் முணுமுணுக்கப்படும் தமிழ் சினிமாவில், நிரந்தரமாக இருக்கும் குற்றச்சாட்டு… ‘நல்ல படங்கள் அதிகம் வருவதில்லை’ என்பது.

ஆனால் அது உண்மையில்லை. தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் முன்னெப்போதையும் விட இப்போது அதிகமாகவே வருகின்றன. ஓடுகிறதா இல்லையா என்பது வேறுவிஷயம்.

சமீபத்தில் அப்படி வந்த படங்களில் ஒன்று தென்மேற்குப் பருவக்காற்று.

சீனு ராமசாமி இயக்கிய இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, வசுந்தரா, சரண்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் இப்படத்தை உலகமெங்கும் வெளியிட்டுள்ளார். தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்குனர்களும், நடிகர்களும் பார்த்து பாராட்டியுள்ளனர்.

குறிப்பாக நடிகை சரண்யா நெகிழ வைத்து விட்டதாக தெரிவித்துள்ளனர் படம் பார்த்த அனைவரும்.

இந்தப் படம் குறித்து நடிகர் கரண் கூறுகையில், “இந்தப் படம் என் தாயை எனக்கு ஞாபகப்படுத்தி விட்டது. கிராமத்தில் நாமும் சேர்ந்து வாழ்ந்த உணர்வு…” என்றார்.

நடிகர் சரவணன் கூறும் போது, “இந்த படத்தின் இசை என்னை வெகுவாக ஈர்த்தது. பாடலை திரும்ப திரும்ப கேட்கிறேன்” என்றார்.

கவிஞர் வைரமுத்து கூறும்போது, “கிழக்கு சீமையிலே படத்துக்கு பின் நிஜமாகவே நான் அழுத படம் இது” என்றார்.

இயக்குனர் தங்கர்பச்சான், “சினிமாத்தனம் இல்லாத நேர்மையான படம்” என்றார்.

படத்தின் ஜீவன் என்று புகழப்படும் அம்மா பாத்திரத்தில் நடித்துள்ள சரண்யாவோ, “வாழ்க்கையில் நான் பெற்ற பெரும் பேறு இந்தப் படத்தில் வீராயி வேடம் கிடைத்ததுதான்” என்றார்.

படத்துக்கு மக்கள் மத்தியிலும் பாராட்டுக்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளன.

மக்கள் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்… இனி இதை பெரிய வெற்றியாக மாற்றுவது தயாரிப்பாளர் கையில்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி