திரையுலகம் விபச்சாரி வேடத்தில் பிரியங்கா சோப்ரா

விபச்சாரி வேடத்தில் பிரியங்கா சோப்ரா

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

இந்தியில் அமிதாப்-மாதவி நடித்த “அக்னி பத்” என்ற படம், இப்போது ரீமேக் செய்யப்படுகிறது. இதில் அமிதாப்பாக, ஹிருத்திக்கும், மாதவியாக, பிரியங்கா சோப்ராவும் நடிக்கின்றனர். படத்தை கரண் ஜோகர் என்பவர் இயக்குகிறார்.

பழைய படத்தின் கதையை அப்படியே எடுக்காமல், இக்கால கட்டத்திற்கு ஏற்றவாறு நிறைய மாற்றங்களை செய்து வருகிறார் இயக்குனர். பழைய படத்தில் மிதுன் சக்ரவர்த்தி, நீலம் ஆகியோர் இரண்டாவது ஜோடியாக நடித்தனர். ஆனால் இப்படத்தில் அந்த வேடமே கிடையாது. அதேபோல் மாதவி நர்ஸாக நடித்த கேரக்டரை மாற்றி, அதற்கு பதிலாக படத்தில் நடிக்கும் பிரியங்கா சோப்ராவை விபச்சாரி கேரக்டரில் நடிக்க வைக்கவுள்ளார்.

படத்தை பற்றி பிரியங்கா சோப்ரா கூறுகையில், இந்தபடத்தில் தமக்கு வித்தியாசமான ரோல் என்றும், இதற்கு முன் இதுபோன்று நடித்ததில்லை என்று கூறினார். மேலும் விபச்சாரி கேரக்டர் என்பதற்காக ஓவர் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று கண்டிஷனும் போட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி