“என்னை ஏமாற்றி விட்டு, வேறு ஒரு பெண்ணுடன் சுற்றும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சினிமா தயாரிப்பாளர் மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை, ராஜா அண்ணாமலை புரம், போட் கிளப் சாலையைச் சேர்ந்தவர் விக்ரம் சிங்(58). “லேசா… லேசா, 12 பி, அச்சம் தவிர், டேக் டூ ஆகிய தமிழ் படங்களின் தயாரிப்பாளர். இவரது மனைவி வித்யா சிங் (53). கடந்த 1983ம்ஆண்டு வித்யா சிங்கிற்கும், விக்ரம் சிங்கிற்கும் இடையில் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு விராஜ் சிங் என்ற மகனும், வசுந்தரா என்ற மகளும் உள்ளனர். வித்யா சிங், ஆந்திர மாநிலம் விஜயநகர மன்னரின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. சிறு வயது முதலே வித்யா சிங் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த வித்யா சிங், தன் கணவர் மீது புகார் மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது: எங்களுக்கு கடந்த 1983ம் ஆண்டில், இந்து திருமண சட்டப்படி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த பின், வாழ்க்கை சிறப்பாக சென்று கொண்டிருந்தது. சமீபத்தில், அவருக்கு மும்பையை சேர்ந்த திருமணமான சோனு கபிலா என்ற பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர் எனக்கு துரோகம் செய்து வருகிறார். இதுகுறித்து, கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்து அது நிலுவையில் உள்ளது.
என் கணவரும், சோனு கபிலாவும் பல இடங்களுக்கு, வெளிப்படையாக சென்று வருகின்றனர். இருவரும் ஒரே அறையில் தங்குவதுடன், வெளியுலகிற்கு கணவன், மனைவி போல் பதிவு செய்து வருகின்றனர். இந்த உறவு கடந்த பல மாதங்களாக தொடர்ந்து வருகிறது.
என் கணவர் மற்றும் அப்பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, வித்யா சிங் கூறும் போது,””கடந்த ஏப்ரல் மாதம் அவர் எங்களை விட்டுவிட்டு, அப்பெண்ணுடன் சென்று விட்டார்.
என்னிடம் இருந்த 50 கிலோ வெள்ளி மற்றும் மன்னர் காலத்திய தங்க நகைகள், திரைப்பட கேமரா, நிலங்கள் என 10 கோடி மதிப்பிலானவற்றை அவர் விற்று திரைப்படங்களில் முதலீடு செய்துள்ளார். தற்போது வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதன் மூலம், என்னை அவர் பல வகைகளில் ஏமாற்றி வருகிறார், என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி