பாட்டில்களை வணங்கும் பக்தகோடிகளில் ஆணுக்கு பெண் சளைத்தவளில்லை என்பதை நிருபித்திருக்கிறார் நடிகை ஒருவர். இவரது பதிலால் ஆடிப்போயிருக்கிறது திரையுலகம்.
முன்னணி ஆங்கில இதழ் ஒன்று சென்னை, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் எங்கே சரக்கடித்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. (கலீஜ் டாஸ்மாக்கிற்கு இந்த போட்டியில் இடமில்லை என்பதையும் இந்த நேரத்தில் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்) ருசித்தவர்களுக்குதானே அருமை தெரியும்? அதன்படி முன்னணி நடிகையான ஸ்ரேயாவை அணுகியிருக்கிறது இந்த இதழ்.
அவரது சாய்ஸ் சென்னையல்ல. ஐதராபாத்; பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் பார் ஒன்றையும், ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் பார் ஒன்றையும் தனது விருப்ப,குடி மடமாக தேர்ந்தெடுத்திருக்கிறார் ஸ்ரேயா. இங்கே என்ன விதமான சரக்குகள் கிடைக்கும். சைட் டிஷ்களில் எது ருசியாக இருக்கும் என்றெல்லாம் அவர் விவரித்திருப்பதை படித்தால் நாக்கில் எச்சிலும் நடு மண்டையில் போதையும் ஊறும் என்பது மட்டும் சர்வ நிச்சயமுங்கோ
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி