சிறுத்தை படத்தின் ஆடியோ, ட்ரைலர் ரிலீஸ் சமீபத்தில் நடந்தது.
டைரக்டர் கெளதம் ஆடியோ வெளியிட, விழாவுக்கு வந்திருந்த திரை உலக பிரமுகர்கள் பெற்று கொண்டனர்.
விழாவில் பேசிய கெளதம், ‘விக்ரம்’ நடிப்பில் வெளி வந்த தூள் படம் தான் எனக்கு பிடித்த ஆக்ஸன் மசாலா படம்.
இந்த சிறுத்தை படம் அதையும் மிஞ்சும். எனக்கு பிடித்த நடிகர் சூர்யா, ஆனால் முதல் படத்திலேயே நட்சத்திர நாயகனாக தன்னை நிரூபித்தவர் கார்த்தி.
இதன் பின்னணியில் சூர்யா உள்ளார் என்றார். டைரக்டர் லிங்கு சாமி, ‘சிறுத்தையில்’ பவரான ஹிரோவாக கார்த்தி நடித்திருப்பார் என் நம்புகிறேன். முன்னணி காமெடியன்களின் அத்தனை சேட்டையும் கார்த்தியிடம் உள்ளது.
இந்த படம் ஹிட்டாகும் என உறுதியாய் நம்புகிறேன் என்றார். கார்த்தி சினிமாவுக்கு வர தயாரிப்பாளர் ஞான வேலும் ஒரு காரணம். ரசிகர்களுக்கு பொங்கல் வேட்டை காத்திருக்கு என்று பேசினார்
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி