ஒரு கொடியில் இரு மலர்கள் இருக்கலாம். ஆனால் ஒரு டைட்டிலில் இரு படங்கள் வர முடியுமா? வரலாம் என்றாலும் குறைந்தது பதினைந்து வருட இடைவெளியாவது இருக்க வேண்டும். ஆனால் ‘வேங்கை’ என்ற பெயரில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
வேங்கைக்கும் வேங்கைக்கும் நடக்கிற இந்த போட்டியை சைலன்ட்டாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது திரையுலகம். ஹரி இயக்கும் வேங்கை படத்தில் தனுஷ், தமன்னா நடித்து வருகிறார்கள்.
புது இயக்குனர் பாலா இயக்கும் வேங்கையில் புது முகங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வேங்கைகளின் குழப்பத்தில் அல்லாடிக் கொண்டிருப்பது அப்பாவி ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகள்தான். வேங்கை ஷட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருங்கன்னு அழைத்தால் இடம் மாறிப் போய் நிற்கிறார்களாம் இவர்கள்.
இது ஒரு புறம் இருக்க, “நம்ம படம் ஏப்ரலில் ரிலீஸ். யார் போட்டிக்கு வந்தாலும் நமக்கு கவலையில்லை” என்கிறார் பாலா. பிளேட் சில்வரா இருந்தா என்ன? பீங்கானா இருந்தா என்ன? படத்தின் நன்றாக இருக்கறதுதான் முக்கியம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி