கபூர் குடும்பத்தில் கடைசி மகளாக பிறந்ததால், கரீனாவுக்கு குடும்பத்தார் மத்தியில் செல்லம் அதிகம். வீட்டிலேயே மிகவும் குண்டான பெண்ணாக இருந்த கரீனா, சினிமாவுக்காக கொஞ்சம் உடம்பைக் குறைத்தார்.
இரண்டே வருடத்தில் மாடல் அழகியாக `வாழைத்தண்டு போல்’ மாறிவிட்டார். கரீனாவின் கட்டுடல் ரகசியத்திற்கு முக்கிய காரணம் யோகா.
முதலில் உடற்பயிற்சி மட்டுமே செய்து கொண்டிருந்த கரீனாவுக்கு, படப்பிடிப்பில் சோர்வு அதிகமாக ஏற்பட்டது. இதனால் யோகாசனத்தை முக்கிய பயிற்சியாக எடுத்துக் கொண்டார். இதன் காரணமாக உடல் எடை குறுகிய காலத்தில் மளமளவென குறைந்தது. சோர்வும் இன்றி மிகவும் புத்துணர்ச்சியாக காணப்பட்டார்.
யோகா பயிற்சிக்கு முன்பு செய்ய வேண்டியது பற்றி கரீனா சொல்கிறார்…
“சாப்பிட்டவுடன் யோகா பயிற்சியில் ஈடுபடக் கூடாது. யோகா பயிற்சிக்குப் பின் இரண்டு மணி நேரம் கழித்து டிபன் சாப்பிடவும். நான்கு மணி நேரம் கழித்து லஞ்ச் சாப்பிடவும்.
தொடக்கத்தில், கொஞ்சம் உடற்பயிற்சி செய்து விட்டு, பின்னர் யோகா பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
இரண்டு வாரத்திற்கு கொஞ்சம் சோர்வாக உணர்வீர்கள். புதியதாக உடலை வளைக்கும்போது, மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளும்போது கொஞ்சம் சிரமம் இருக்கும். அதற்காக பயிற்சியை விட்டுவிடாமல், தொடர்ந்து செய்யவும்.
உடலை முன்புறமும், பின்புறமும் வளைக்கும்போது மூச்சை இழுத்து, விடுவது எப்படி? என்பதை பயிற்சியாளரிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதற்கேற்ப செய்வது அவசியம்.
சில நேரங்களில் தசைகளில் வலி ஏற்பட்டால், உடனே நிறுத்திவிட்டு ரிலாக்ஸ் ஆகி விடுங்கள்.
ஒவ்வொரு ஆசனம் செய்யும்போதும், அடுத்த ஆசனத்திற்கு மாறும்போதும் பத்து நிமிடம் இடைவெளி விடவும்.
உடலுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்க வேண்டும் என்றால், முறையான உணவுக்கட்டுபாடு அவசியம். ஜீரணமாகாத உணவு, போதைப் பொருட்கள் கூடாது.
தினமும் 4 அல்லது 5 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். குளிர்சாதன அறையில் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யக் கூடாது.”
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி